ராணுவத்தில் இணைந்த உக்ரைன் டென்னிஸ் வீரர் - ரோஜர் பெடரரையே வீழ்த்தியவராம்...!

SergiyStakhovsky ukrainiantennisplayer WarinUkraine
By Petchi Avudaiappan Mar 21, 2022 07:49 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ரஷ்யாவுக்கு எதிரான போர்க்களத்தில் தனது நாட்டுக்காக உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி களமிறங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நேட்டோ அமைப்பில் சேர முடிவு செய்த உக்ரைனின் முடிவு, தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனும் பதில் தாக்குதல் கொடுப்பதால் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

ராணுவத்தில் இணைந்த உக்ரைன் டென்னிஸ் வீரர் - ரோஜர் பெடரரையே வீழ்த்தியவராம்...! | Ukrainian Tennis Player Joins Country S Military

இதனிடையே கடந்த 2013 ஆம் ஆண்டு விம்பிள்டன் தொடரின் 2வது சுற்றில் நடப்பு சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி தனது நாட்டுக்காக போர்க்களத்தில் களம் கண்டுள்ளார். 

இவர் கீவ் நகரிலுள்ள கலாஷ்னிகோவ்வில் உள்ள ஜனநாயக போராட்டத்தின் சின்னமான மைதான் சதுக்கத்தில் ராணுவ உடை அணிந்து துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கு பிறகு தொழில்முறை டென்னிஸில் இருந்து விலகியிருந்த ஸ்டாகோவ்ஸ்கி உக்ரைன் மீது போர் தொடுப்படுதற்கு முந்தைய தினம் தனதுமனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் விடுமுறையை கழிக்க துபாய் சென்றிருந்தார். 

ஆனால் தன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதைக் கண்ட அவர் உடனடியாக உக்ரைன் திரும்பிராணுவத்தில் தன்னார்வலராக இணைந்துள்ளார். ஒரு நாளைக்கு இரு முறை என 4 மணி நேரம் ரோந்து பணியில் ஸ்டோகோவ்ஸ்கி ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.