உக்ரைனில் போர் பதற்றம் : உக்ரைன் மீது நாளை முதல் ரஷ்யா போர் தொடுக்கிறதா ?
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷியா அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.

போர் நடத்தும் எண்ணம் இல்லாவிட்டால் எதற்காக எல்லையில் படைகளை குவிக்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் கேள்வியாக உள்ளது. ரஷ்யா எந்த நேரத்திலும் வான்வழியாக குண்டுகளை வீசி போரை தொடங்கலாம் என அமெரிக்கா தனக்கு கிடைத்த உளவுத் துறை தகவலை தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைனிலிருந்து அமெரிக்கர்களையும் நாடு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது. இது போல் 12க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை தாய்நாட்டுக்கு திரும்ப வந்துவிடுமாறு அழைத்துள்ளனர்.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யாவின் படையெடுப்பு நாளை (பிப்.16) தொடங்கலாம் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார் உகரைன் அதிபரின் கருத்திற்கு பதில் கூறியுள்ள அமெரிக்க ராணுவ தலமையகம் பெனட்கன் விடுத்துள்ள தகவலின் படி ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைன் மீது படையெடுக்கலாம் என கூறியுள்ளது.
இதனிடையே, ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கொல்ஸ் இன்று ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார். அப்போதை உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வார் எனத் தெரிகிறது.