போரால் அழிக்கப்பட்ட நகரம்... - வெளியான சோகப் புகைப்படம்... - கண்கலங்கும் உக்ரைனியர்கள்...!

Russo-Ukrainian War Viral Photos
By Nandhini Mar 07, 2023 10:41 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

போரால் அழிக்கப்பட்ட நகரத்தின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி சோகத்தை வரவழைத்துள்ளது.

போரால் அழிக்கப்பட்ட நகரம்

ஒரு வருடமாக உக்ரைன் - ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனின் பல பயங்கரமான மற்றும் சோகமான படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் டொனெட்ஸ்கின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நகரமான மரிங்கா. அந்த நகரம் இந்த போரால் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் சுமார் 10,000 பேர் தங்கியிருந்த வீடாக இருந்தது. தற்போது, இந்த நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டு ஒரு அமைதியான நகரமாக மாறியுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களைப் பார்த்த உலக மக்களும், உக்ரைன் மக்களுக்கும் கண்ணீர் விட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். 

ukrainian-marinka-the-donetsk-region-viral-photo