உக்ரைன் போரில் திடீர் திருப்பம் : ரஷ்யாவின் ராணுவ டாங்கியை திருடிய விவசாயி

russia ukrain nuclearwar ukrainianfarmerstolearussianmilitarytrack SaveIndiansInUkraine
By Petchi Avudaiappan Feb 28, 2022 05:02 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

உக்ரைனில் ரஷ்யா தீவிரமாக போர் தொடுத்து வரும் நிலையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 5வது நாளாக போர் தொடுத்து வருகிறது.

இதனிடையே போர்க்களத்தில் இருந்து வெளியாகும் வீடியோக்கள், புகைப்படங்கள் காண்போர் நெஞ்சை கலங்க வைக்கும் படி இருந்தாலும், உக்ரைன் மக்கள் ரஷ்ய ராணுவத்தினரை எதிர்க்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் உக்ரேனிய விவசாயி ஒருவர் தனது டிராக்டரை பயன்படுத்தி ரஷ்யாவின் ராணுவ டாங்கியை திருடி செல்கிறார். இது நிச்சயம் ரஷ்ய போரில் நடக்கும் வேடிக்கையான சம்பவமாக இருக்கலாம் என இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.