இரட்டை கோபுரம் பாணியில்.. 38 மாடிக் கட்டிடம்; உக்ரைன் ட்ரோன் தாக்குதல் - பதபதைக்கும் காட்சி!

Russo-Ukrainian War World
By Swetha Aug 26, 2024 09:00 AM GMT
Report

38 அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

38 மாடிக் கட்டிடம்

கடந்த 2022ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. 2 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்

இரட்டை கோபுரம் பாணியில்.. 38 மாடிக் கட்டிடம்; உக்ரைன் ட்ரோன் தாக்குதல் - பதபதைக்கும் காட்சி! | Ukrainian Drone Strikes On Russian Building

என தொடர்ந்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.இருப்பினும் இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகனைத் தாக்குகல்களை நடத்தி வருகிறன. இந்த போரால் இரு நாடுகளில் இருந்து ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை பெற்ற மோடி - நெகிழ்ந்த உக்ரைன் அதிபர்!

முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை பெற்ற மோடி - நெகிழ்ந்த உக்ரைன் அதிபர்!

உக்ரைன் தாக்குதல்

ஆனால் இந்த போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவில் சரடோப் நகரில் உள்ள 38 அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இரட்டை கோபுரம் பாணியில்.. 38 மாடிக் கட்டிடம்; உக்ரைன் ட்ரோன் தாக்குதல் - பதபதைக்கும் காட்சி! | Ukrainian Drone Strikes On Russian Building

இந்த சம்பவம் அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல் பாணியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் அந்தக் கட்டிடம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி 2023 ஆம் ஆண்டின் இறுதியில், அதாவது போர் தொடங்கிய ஓராண்டுக்குள்ளாக ரஷ்யப் படைகள் உக்ரைனுக்கு எதிராக சுமார் 7,400 ஏவுகணைகள் மற்றும் 3,900 ஷாஹெட் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரேனிய இராணுவ அதிகாரிகளின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.