ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்டு புறப்பட்ட உக்ரைன் விமானம் கடத்தல்

Ukraine Afghanistan Kabul
By Irumporai Aug 24, 2021 08:45 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உக்ரேனியர்களை அழைக்க ஆப்கானிஸ்தானுக்கு வந்த உக்ரேனிய விமானம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

ஆப்கானில் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அங்கு உள்ள மக்களை வெளியேற்றும் பணியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும், ஆகஸ்ட் 31ம்க்கு பிறகு வெளிநாட்டு படைகள் ஆப்கானில் இருக்கக்கூடாது என தலிபான்கள் ஏற்கனவே எச்சரிக்கை கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் ஆப்கானில் உள்ள உக்ரைனியர்களை மீட்க வந்த உக்ரைன் நாட்டு விமானம் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு ஈரான் நாட்டுக்கு கடத்தப்பட்டதாக உக்ரைன் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் Yevgeny Yenin கூறியுள்ளார் .

உக்ரைன் விமானத்தை கடத்திய கடத்தல்காரர்கள் ஆயுதம் ஏந்திய இருந்ததாகவும் அதே சமயம் விமானத்திற்கு என்ன ஆனாது என்பது குறித்து எந்த தகவலும் இது வரை வெளியாகவில்லை.