ரஷ்யாவின் அணுவாயுத மிரட்டலும்.. நேட்டோவின் புன்னகையும்!
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமான தினம் முதலாக, ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதலை மேற்கொள்ளப் போகிறதென தொடர்ந்தும் பொருளாகவே இருந்து வருகிறது.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பித்த மூன்றாவது நாள், அதாவது 2022 பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி தனது முதலாவது அணு ஆயுத எச்சரிக்கையை விடுத்ததுடன்,
ரஷ்யாவின் அணு குண்டுத் தாக்குதல் பிரிவை அதிஉச்ச தயார் நிலையில் இருக்குமாறு தான் பணிப்புரை விடுத்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்திருந்தார்.
அணு ஆயுத யுத்தம்
அதுமாத்திரமல்ல, ரஷ்யாவின் நடவடிக்கை விடயத்தில் வேறு எந்த நாடாவது சம்பந்தப்பட்டால் தங்கள் சரித்திரத்தில் கண்டிராத அழிவை அவர்கள் சந்திக்கவேண்டி ஏற்படும் என பகிரங்கமாகவே அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஒரு அணு ஆயுத யுத்தம் ஏற்படும் சாத்தியம் இருப்பதையும், அந்த யுத்தத்தை முடிந்தவரை ரஷ்யா தவிர்க்கவே விரும்புவதாக ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் கூறியிருந்தார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கையில் மேற்குலகம் நேரடியாக தலையீடு செய்தால், அணு ஆயுத தாக்குதல்களை மேற்கொள்ள ரஷ்யா தயங்காது என்றும் அவர் அப்போது கூறியிருந்தார்.
ரஷ்ய தரப்பின் அணு ஆயுத தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகள், பிரித்தானியா மீது எப்படியான தாக்குதல்களை மேற்கொள்ளும் என தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரித்த வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.