உக்ரைனுக்கு பதிலாக தவறுதலாக சொந்த நகரிலேயே குண்டு வீசிய ரஷ்யா: அதிர்ச்சியில் பொது மக்கள்

Ukraine Russian Federation
By Irumporai Apr 21, 2023 10:13 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உக்ரைன் நாட்டின் மீது கடந்த ஒரு ஆண்டாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா தவறுதலாக சொந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சொந்த நாட்டில் குண்டு

ரஷ்ய போர் விமானம் ஒன்று உக்ரைன் எல்லையில் உள்ள நகரில் குண்டு வீசுவதற்கு பதிலாக ரஷ்யா எல்லையில் உள்ள நகரில் குண்டு வீசியது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

[46FS8D ] 

இந்த சம்பவம் குறித்து ரஷ்ய அதிகாரி ஒருவர் கூறிய போது ரஷ்யா வீசிய குண்டால் நகரத்தின் மையப்பகுதியில் பெரும் பள்ளம் உருவாகியுள்ளது.

பரபரப்பில் ரஷ்யா

மேலும் இந்த குண்டுவெடிப்பில் இரண்டு பெண்கள் காயம் அடைந்துள்ளனர், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்று தெரிவித்தார்.

உக்ரைன் நகரின் மீது குண்டு வீசுவதற்கு பதிலாக ரஷ்ய நகரின் மீது தவறுதலாக கொண்டு வீசியதை அடுத்து விசாரணை நடத்தி வருவதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.