உக்ரைன் போரில் ரஷ்யாவின் மேலும் ஒரு தளபதி பலி - அதிபர் விளாமிர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
உக்ரைனுடனான போரில் ரஷ்யாவின் மேலும் ஒரு தளபதி பலியானதாக உக்ரைன் அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நேட்டோ நாடுகளின் பட்டியலில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இப்போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக்கொண்டிக்கிறது.

இதனிடையே உக்ரைன் நடத்திய பதில் தாக்குதலில் ரஷ்யாவின் 150 வது மோட்டார் பொருத்திய துப்பாக்கி படை பிரிவின் தளபதி ஒலெக் மித்யேவ் கொல்லப்பட்டு விட்டதாக உக்ரைன் அதிபர் விளாமிர் ஜெலன்ஸ்கி உறுதி செய்துள்ளார். அவரது படத்தை உக்ரைன் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் ஆண்டன் ஜெராஷ்சென்கோ வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் கொல்லப்பட்டுள்ள ரஷ்ய படைத்தளபதிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.