மிரட்டும் யுத்தம் , செக் வைக்கும் ஐ.நா : சிக்கலில் ரஷ்யா?
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 5-வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு தடை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு அவசர கூட்டம் இன்று நள்ளிரவு கூடுகிறது .
கடந்த வெள்ளிக்கிழமை கூடிய ஐ .நா. பொதுசபையின் கூட்டத்தில், அமெரிக்கா மற்றும் அல்பேனியா நாடுகள் இணைந்து ரஷியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானத்தை கொண்டு வந்தது
அதே சமயம் ரஷியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் 15 நாடுகள் கொண்ட ஐ .நா. பொதுசபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தியது.

இந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.15 உறுப்பினர்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கவுன்சிலில், 11 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தன. ஆனால், சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை.
இந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து விவாதிக்க ஐ.நா. பொதுசபையின் 11வது சிறப்புக்கூட்டம் இன்று இந்திய நேரப்படி 8.30 மணிக்குகூடுகிறது. 40 ஆண்டுகளில் முதல் முறையாக அவசரக்கூட்டம் நியூயார்க்கில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் ரஷியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் சில முடிவுகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.