‘’ யார் இடத்தில வந்து யார் சீன போடுறது ’’ : ரஷ்ய போர் வீரரிடம் தைரியமாக பேசிய உக்ரைன் பெண்

RussiaUkraineWar UkraineRussia
By Irumporai Feb 25, 2022 12:10 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ரஷ்ய வீரரை நோக்கி பெண் ஒருவர் தைரியமாக  பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

உக்ரைனில் தற்போது போர் பதற்றம் நிலவி வருகிறது, ரஷ்யா தொடர்ந்து 2 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது, இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

இந்த நிலையில் ரஷ்யாவின் தலைநகரான  கீவ் நகருக்குள் ஊடுருவி உள்ள ஆயுதம் தாங்கிய ரஷ்ய வீரரிடம், "உங்களுக்கு எங்கள் மண்ணில் என்ன வேலை?" என்று கேள்வி எழுப்பிய உக்ரைன் பெண்ணின் வீடியோ வைரலாகி உள்ளது.

அந்த பெண் ரஷ்ய ராணுவ வீரரிடம் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியுள்ளார்,  அந்தப் பெண் ரஷ்ய வீரரிடம் வாதிடுவதை வழிப்போக்கர் ஒருவர் வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர, அது தற்போது உலகம் முழுவதும் வைரலாகிவிட்டது.

அந்த வீடியோவில் அப்பெண், ஆயுதம் ஏந்திய ரஷிய வீரரைப் பார்த்து, "நீங்கள் யார்?" எனக் கேட்கிறார். அந்த வீரர் "எங்களுக்கு இங்கே வேலை இருக்கிறது. நீங்கள் அந்தப் பக்கம் செல்லுங்கள்" எனக் கூறுகிறார்.

உடனே அந்த பெண்  இங்கே உங்களுக்கு என்ன வேலை?" என்று மீண்டும் அந்தப் பெண் கோபமாக பேசுகிறார் அதற்கு அந்த வீரர் நிதானமாக, "நமது பேச்சால் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் செல்லலாம்எனக் கூறுகிறார்.

ஆனால் அந்தப் பெண் கெத்தாக உங்கள் பாக்கெட்டில் கொஞ்சம் சூரியகாந்தி விதையைப் போட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் வீழ்த்தப்பட்டு உக்ரைனில் புதைக்கப்படும் போது அந்த விதையாவது வளரட்டும் என்று கூறி விட்டு செல்கிறார்.

சூரியகாந்தி மலர், உக்ரைன் நாட்டின் தேசிய மலர் ஆகும். போர் பதட்ட சூழ்நிலையில் நிலவும் உக்ரைன் நாட்டில் துணிச்சலாக ரஷ்ய ராணுவ வீரரை எதிர்த்து பேசிய  உக்ரைன் பெண்ணின்  வீடியோ ச்மூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.