மோடி நினைத்தால் உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வரும் : அமெரிக்கா கருத்து
பிரதமர் மோடி நினைத்தால் உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு வர முடியும் எனவும் அதற்கு அமெரிக்கா துணை நிற்கும் எனவும் அமெரிக்க வெள்ளை மாளிகை முக்கிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் ஓய்ந்த பாடில்லை.
இன்னும் அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று தன வருகிறது. உலக நாடுகளில் பெருநாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார தடை விதித்தும், உக்ரைனுக்கு மறைமுகமாவே , நேரடியாகவோ ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.

இரு நாடுகளும் போர் நிறுத்ததில் ஈடுபட பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகிறது. இதில் நமது நாடும் ஒன்று. போர் நிறுத்தம் செய்து மக்கள் அமைதி நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. இந்த போர் விவகாரம் குறித்து, வெள்ளை மாளிகையின் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கருத்து
இது குறித்து அவர் கூறுகையில் இந்தியா நினைத்தால் ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்தி விடலாம் என கூறியிருந்தார். அதாவது, நமது பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசும் வாய்ப்பு உள்ளது.
அதனை பயன்படுத்தி ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என கூறியிருந்தார். இந்த முயற்சிக்கு அமெரிக்கா முழு ஆதரவை தரும் எனவும் அவர் கூறினார்.
கடந்த பிப்ரவரியில் போர் தொடங்கியதில் இருந்து இந்தியாவின் நிலை நடுநிலையாக உள்ளது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி குறிப்பிட்டார்.