போரை நிறுத்துங்கள் புதின்... குண்டு விழாத நாடுகளிலும் ஏழைகளின் மண்பானை உடையும்... - வைரமுத்து டுவிட்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இப்போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து, மாணவர்கள் பலர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அவரவர் நாடுகளுக்கு திரும்பி வருகிறார்கள். தற்போது, உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
போரை நிறுத்துங்கள் புதின்
மில்லி மீட்டராய்
வளர்ந்த உலகம்
மீட்டர் மீட்டராய்ச் சரியும்
கரும்புகை
வான் விழுங்கும்
பகலை
இருள் குடிக்கும்
கடல்கள் தீப்பிடிக்கும்
குண்டு விழாத நாடுகளிலும்
ஏழைகளின்
மண்பானை உடையும்
ஆயுதம்
மனிதனின் நாகரிகம்;
போர் அநாகரிகம்
போரை நிறுத்துங்கள் புதின்
என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
போரை நிறுத்துங்கள் புதின்
— வைரமுத்து (@Vairamuthu) March 9, 2022
மில்லி மீட்டராய்
வளர்ந்த உலகம்
மீட்டர் மீட்டராய்ச் சரியும்
கரும்புகை
வான் விழுங்கும்
பகலை
இருள் குடிக்கும்
கடல்கள் தீப்பிடிக்கும்
குண்டு விழாத நாடுகளிலும்
ஏழைகளின்
மண்பானை உடையும்
ஆயுதம்
மனிதனின் நாகரிகம்;
போர் அநாகரிகம்
போரை நிறுத்துங்கள் புதின்