‘அமெரிக்கா, உக்ரைன் ராணுவ குழுவினருக்கு வழிகாட்டுகிறது...’ - ரஷ்யா காட்டம்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 8-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள்.
இன்று 3-வது முறையாக கீவ் நகர் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்போவதாக ரஷ்யா உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கீவ் நகரில் பெரும் பதற்றம் காணப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைன் ராணுவ குழுவினர் தற்போது வரை அமெரிக்காவின் வழிகாட்டுதல்களை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றும், ஐரோப்பாவை அமெரிக்கா கட்டுப்படுத்தி வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
