உக்ரைன் எல்லையில் காதலிக்கு Love Propose பண்ண ராணுவ வீரர் - வைரலாகும் வீடியோ
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
ரஷ்யா உக்ரைன் மீது வான்வழியாக விமானம் மூலமாக வெடி குண்டு மழையை பொழிந்தது. மேலும், தரை வழியாகவும், கடல் வழியாகவும் மும்முனைகளிலிருந்து தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உக்ரைனில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு மக்கள் அவசர, அவசரமாக அந்தந்த நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உக்ரைன் எல்லையில் ஒரு கார் வந்தது. அந்த காரை வழிமறித்த ராணுவ வீரர்கள் கரை நிறுத்தினர். அப்போது, காரிலிருந்தவர்கள் வெளியே வந்தனர். அப்போது, அனைவரையும் கைகளை பின்பக்கமாக கட்டுமாறு ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.
அப்போது, பயந்துபோன கார் வந்தவர்கள் கைகளை பின்பக்கம் கட்டி, காரில் சாய்ந்துக் கொண்டனர். அப்போது, காரின் பின்பக்கம் நின்றுக்கொண்டிருந்த பெண்ணை ஒரு ராணுவ வீரர் சிண்டினார். திரும்பிப் பார்த்த அப்பெண்ணிடம் பூக்கொத்தை கொடுத்து I Love You என்று அந்த வீரர் love Propose செய்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண், மகிழ்ச்சியில் அந்த ராவணு வீரரை கட்டித் தழுவி காதலை ஏற்றார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Kinda hard to beat this proposal: pic.twitter.com/pwNc1sC8Zf
— kendis (@kendisgibson) March 7, 2022