‘நாங்க இருக்கோம்... கவலை வேண்டாம்...’ - முதல்முறையாக உக்ரைனுக்கு ஏவுகணைகளை அனுப்ப அமெரிக்க முடிவு
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவ வீரர்கள் பயங்கரமாக சண்டையிட்டு வருகிறார்கள்.
உக்ரைன் - ரஷ்யா போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
மேலும், உக்ரைனுக்கு ஆயுத மற்றும் நிதி உதவிகளை பல்வேறு உலக நாடுகள் வழங்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்று ஜெர்மனி அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டது.

இதனையடுத்து, முதல்முறையாக உக்ரைனுக்கு ஆயுதங்களை நாங்க அனுப்புகிறோம் என்று அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது. உங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று உக்ரைன் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனையடுத்து, உக்ரைனுக்கு உதவி செய்ய, வெள்ளை மாளிகையால் அங்கீகரிக்கப்பட்ட தொகுப்பின் ஒரு பகுதியாக போர் விமானங்களை எதிர்கொள்ளும் அதிவேக ஏவுகணைகளை நேரடியாக வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்நிலையில், ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த ஏவுகணைகள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு பயன்படுத்தப்படும்.
இதற்கிடையில், 3 ஆயிரம் இயந்திர துப்பாக்கிகள், மற்றும் ராணுவ டேங்கிகளை எதிர்க்கும் 200 கையெறி ஏவுகணைகளை வழங்க இருப்பதாக பெல்ஜியம் அறிவித்திருக்கிறது.
இதற்காக, பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரூவிற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்திருக்கிறார். மேலும், ரஷ்ய விமானங்களுக்கு அனுமதி மறுத்த போர்ச்சுல் நாட்டிற்கும் உக்ரைன் அதிபர் நன்றி கூறியுள்ளார்.