வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை - உக்ரைனில் சிக்கிய தமிழர்களை மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

Russia Ukraine War மு.க.ஸ்டாலின் உக்ரைன் ரஷ்யா தாக்குதல் chief-minister-of-tamil-nadu தமிழர்களை மீட்க ஆலோசனை
By Nandhini Mar 03, 2022 07:28 AM GMT
Report

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 8-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள். இன்று 3-வது முறையாக கீவ் நகர் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்போவதாக ரஷ்யா உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், கீவ் நகரில் பெரும் பதற்றம் காணப்படுகிறது. அப்பாவி பொதுமக்களின் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எந்தவொரு மாணவரையும் பணயக் கைதியாக பிடித்து வைத்துள்ளதாக எந்த தகவலும் வரவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்கும் பணி குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, பொதுத்துறை செயலாளர் ஜெகன்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.     

வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை - உக்ரைனில் சிக்கிய தமிழர்களை மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை | Ukraine Russia War Tamils C M Of Tamil Nadu Advice