உக்ரைனில் பாஸ்போர்ட் தொலைத்து தவித்த தமிழக மாணவர் - இந்திய தூதுரகம் அதிரடி மீட்பு

Russia Ukraine War recovery மீட்பு tamilnadu-student இந்திய தூதுரகம் பாஸ்போர்ட் தொலைத்த தமிழக மாணவர்
By Nandhini Mar 07, 2022 05:18 AM GMT
Report

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள். இதனையடுத்து, மாணவர்கள் பலர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அவரவர் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், பாஸ்போட்டை தொலைத்துவிட்டு உக்ரைனில் தவித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவருக்கு இந்திய தூதரகம் ருமேனிய அரசின் உதவியுடன் புது பாஸ்போர்ட்டை பெற்று தந்துள்ளது. இதனையடுத்து, இன்று இரவு இவர் இந்தியா திரும்புகிறார்.   

உக்ரைனில் பாஸ்போர்ட் தொலைத்து தவித்த தமிழக மாணவர் - இந்திய தூதுரகம் அதிரடி மீட்பு | Ukraine Russia War Tamil Nadu Student Recovery