உக்ரைனில் செய்தி ஒளிப்பரப்பின்போது பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிகுண்டுகள் - வெளியான அதிர்ச்சி வீடியோ

Russia Ukraine War உக்ரைன் ரஷ்யா போர் Shocking-video Explosive-bombs News-broadcaster வெடித்த வெடிகுண்டுகள்
By Nandhini Mar 03, 2022 11:00 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 8-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள்.

இன்று 3-வது முறையாக கீவ் நகர் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்போவதாக ரஷ்யா உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கீவ் நகரில் பெரும் பதற்றம் காணப்படுகிறது.

தற்போது சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உக்ரைன் தலைநகர் கீவ்வில், செய்தியாளர் ஒருவர் தனது நிறுவனத்திலிருந்து செய்திகள் குறித்த வீடியோவை பதிவு செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அவருக்குப் பின்னால் சிறிது தூரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தது. இதனால் செய்தியாளர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

பயந்துபோன செய்தியாளர் உடனடியாக செய்தியை பதிவு செய்வதை நிறுத்தினார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைத்துள்ளது.