ரஷ்யர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்தில் செலென்ஸ்கி கையெழுத்திட்டார்

ukraine-russia-war
By Nandhini Mar 11, 2022 12:29 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் 16-வது நாளாக ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

ரஷ்யா உக்ரைன் மீது வான்வழியாக விமானம் மூலமாக வெடி குண்டு மழையை பொழிந்தது. மேலும், தரை வழியாகவும், கடல் வழியாகவும் மும்முனைகளிலிருந்து தாக்குதல் நடத்தியது.

இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உக்ரைனில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு மக்கள் அவசர, அவசரமாக அந்தந்த நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கீவ், கார்கிவ், சுமி உட்பட முக்கிய நகரங்கள் குறி வைத்து ரஷ்ய படைகள் நடத்தி வருவதாகவும், இதுவரை 21 லட்சம் பேர் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர் என்றும், மேலும், 516 பேர் இத்தாக்குதலுக்கு பலியாகியுள்ளதாகவும், இதில் 908 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக ஐ.நா தகவல் தகவல் தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், உக்ரைனில் உள்ள ரஷ்யர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்திற்கு கடந்த 3ம் தேதியன்று நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள ரஷ்யர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்தில் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி கையெழுத்திட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து, ரஷ்யாவுக்கு தொடர்ந்து சிக்கல்களை உருவாக்கினால், உலகளாவிய அளவில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தக்கூடும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.