சாலையில் சென்ற பொதுமக்கள் கார்... வெறித்தனத்தோடு சுக்குநூறாக உடைத்த ரஷ்ய ராணுவ டாங்கி.. - வைரல் புகைப்படம்
உக்ரைன் நாடு மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் அமைதி சீர்குலைந்துள்ளது.
அடுத்தடுத்து நடத்தப்படும் குண்டு வெடிப்பு சம்பவங்களால் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
பலர் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி பிற நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் ரத்தக்கறைகளும், கட்டிடங்களுன் இடிபாடுகளும்தான் கிவியில் காணப்படுகிறது. இருக்க இடமின்றி உக்ரைன் மக்கள் நடுவீதியில் கிடக்கின்றனர்.
உலக நாடுகள் ரஷ்யாவின் இந்த செயலுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. உலக நாட்டு மக்களும், உலக நாட்டின் தலைவர்கள் அனைவரும் போரை நிறுத்தும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைனின் ஒபலோனின் நகர் பகுதிக்குள் நுழைந்த ராணுவ டாங்கிகள் அங்கிருந்த சாலைகள் வழியாக அரசு கட்டிடங்களை கைப்பற்றி வருகிறது.
இதற்காக புறப்பட்ட டாங்கிகள் சாலையில் சென்றுக்கொண்டிருந்த பொதுமக்களின் வாகனங்களை மோதி தள்ளுவதாக புகார் எழுந்தது.
இதை உறுதி செய்யும் விதமாக, உக்ரைனின் ஒபலோனுக்குள் புகுந்த ரஷ்ய ராணுவ டாங்கி ஒன்று சாலையில் சென்ற கார் மீது மோதி தள்ளி சுக்குநூறாக உடைக்கும் காட்சி ஒன்று வெளியாகி இருக்கிறது.
இந்த புகைப்படத்தை ‘அல் ஜசீரா’ என்ற அமைப்பு சமூக வலைதளத்தில் பதிவிட்டது.
இந்த வீடியோ ஒரு சில மணி நேரத்திலேயே சமூகவலைத்தளங்களில் வைரலாகி உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சர்வதேச அமைப்புகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening
Mothers of India: வெறும் 10 மாத வாழ்வு… 5 உயிர்களுக்கு ஒளி தந்து உடல் உறுப்புத் தானத்தில் வரலாறு படைத்த Aalin Manithan