மனித பிணங்களை கிழித்து... அட்டூழியம் செய்யும் ரஷ்ய ராணுவம் - வெளியான அதிர்ச்சி தகவல்
கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
போரை கைவிடுமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், உக்ரைன் பகுதியில் அதிக இழப்பை ஏற்படுத்த ரஷ்ய ராணுவம் திட்டமிட்டிருக்கிறது.
பெண்கள் மற்றும் சிறுமிகளை பலாத்காரம் செய்தும் அப்பாவி மக்களை கொன்று குவித்தும் நாசப்படுத்தி வருகின்றனர் . உக்ரைனில் அதிகப்படியான மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அந்த சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையில், கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இன்னொரு கொடுமை என்னவென்றால், இறந்து கிடக்கும் பிணங்களின் உடல்களை பிளந்து, வெடிகுண்டை நிரப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் உலக அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 10ம் தேதி, கீவ்வில் உள்ள ஒரு கிராமத்தில் சாஷா என்ற 4 வயது சிறுவனுடன் பாட்டி ஒருவர் படகில் ஏறி போரிலிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், சாஷாவும், அவனது பாட்டியும் காணாமல் போனார்கள்.
அவர்கள் இருவரும் எங்கையாவது உயிருடன் இருப்பார்கள் என்று உறவினர்கள் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால், ரஷ்ய படையினரால் சாஷாவும் அவன் பாட்டியும் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் சிறுவனின் சடலமாக நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
