ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன் - பற்றி எரியும் நகரங்களால் பதற்றம் அதிகரிப்பு..!
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள்.
நேற்று 3-வது முறையாக கீவ் நகர் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்போவதாக ரஷ்யா உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கீவ் நகரில் பெரும் பதற்றம் காணப்பட்டது.
இந்நிலையில், தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது இன்று அதிகாலை ரஷிய படைகள் நேரடியாக குறி வைத்து பயங்கரத் தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தின் சுகோய் சு-25 போர் விமானத்தை உக்ரைன் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைனில் வோல்னோவாகா டொனெட்ஸ்க் பகுதியில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவ தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
