உக்ரைன் கிவியில் அடிக்கும் பிணவாடை - கொத்து கொத்தாக மனித உடல்கள் மீட்பு - நிலைகுலையும் மக்கள்

ukraine உக்ரைன் russia-war recovery-of-human-bodies கிவி மனித உடல்கள் மீட்பு
By Nandhini Apr 16, 2022 05:57 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.

இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

போரை கைவிடுமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.

உக்ரைன் பகுதியில் அதிக இழப்பை ஏற்படுத்த ரஷ்ய ராணுவம் திட்டமிட்டிருக்கிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளை பலாத்காரம் செய்தும் அப்பாவி மக்களை கொன்று குவித்தும் நாசப்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில், உக்ரைனில் அதிகப்படியான மனித சடலங்கள் மீட்கப்பட்டன. அந்த சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையில், கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவியிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறியுள்ள நிலையில், அங்கிருந்து சுமார் 900 உடல்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்திருக்கிறது.      

உக்ரைன் கிவியில் அடிக்கும் பிணவாடை - கொத்து கொத்தாக மனித உடல்கள் மீட்பு - நிலைகுலையும் மக்கள் | Ukraine Russia War Recovery Of Human Bodies