அடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் ரஷ்யா - இன்னொரு விஷயத்தில் தடை விதித்த கனடா - உலக நாடுகள் காட்டம்!
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவ வீரர்கள் பயங்கரமாக சண்டையிட்டு வருகிறார்கள்.
உக்ரைன் - ரஷ்யா போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகிறார்கள்.
இதற்கிடையில் ரஷ்யா- உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தையின் முதற்சுற்று நடந்து முடிந்துள்ளது. உலக நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது.
உக்ரைனுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இதனையடுத்து, ரஷ்யா உக்ரைன் மீது யுத்தம் செய்து வருவதால், பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்திருக்கிறது.

அதாவது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷிய ருபெலின் மதிப்பு பெரும் சரிவை சந்தித்துள்ளதால் ரஷ்யாவின் தேசிய வங்கி வட்டி விகிதத்தை 20 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு கனடா தடைவிதித்திருக்கிறது.
இதனையடுத்து, உக்ரைனுக்கு ரணுவ டாங்கிகளை அழிக்கும் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே 3 முறை ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உடல் கவசம், தலை கவசம், இரவு நேரத்தில் பயன்படுத்தும் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை கனடா உக்ரைனுக்கு அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.