‘ப்ளீஸ்... உடனடியாக ரஷ்ய அதிபரிடம் பேசுங்கள்...’ - இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் வேண்டுகோள் - பிரதமர் அவசர ஆலோசனை

Modi பிரதமர் மோடி Ukraine-Russia war Prime-Minister Urgent-Consultation உக்ரைன்-ரஷ்யா போர் அவசர ஆலோசனை
By Nandhini Feb 24, 2022 07:50 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு பகுதியில் ரஷ்யா ராணுவம் குண்டு மழை பொழிந்து வருகிறது. உக்ரைனில் உள்ள ராணுவ தளங்கள், விமான தளங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைன் மீதான போரை ரஷிய நிறுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது.இதனால், அங்கு மக்களிடையே பெரும் பதற்றமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

இந்தப் போரால் இந்தியாவில் பொருட்களின் விலை கடுமையாக உயர வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா, ஐநா பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளன.

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து, மத்திய அரசு தரப்பில் தொடர்ந்து விசாரித்து வருகிறது. உக்ரைனில் சிக்கிக்கொண்டுள்ள 20 ஆயிரம் இந்தியர்களின் கதி என்ன என்பது குறித்து அறிய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

‘ப்ளீஸ்... உடனடியாக ரஷ்ய அதிபரிடம் பேசுங்கள்...’ - இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் வேண்டுகோள் - பிரதமர் அவசர ஆலோசனை | Ukraine Russia War Prime Minister Consultation

இந்தியர்களை மீட்க ஏர் இந்திய விமானம் அனுப்பப்பட்டது. ஆனால், உக்ரைனில் குண்டு வீசப்பட்டு வருவதால், விமானங்கள் திருப்பி வந்துவிட்டது. இதனால், இந்தியர்களின் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவுக்கு ஜெர்மனி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இதனிடையே உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்த ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் 5 ஜெட் விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது என உக்ரைன் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர், பிரதமர் மோடி உடனடியாக ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெலென்ஸ்கி ஆகியோரை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், உக்ரைன்- ரஷ்யா போர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மூத்த மந்திரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.