உக்ரைன் எல்லையில் வெறும் உருளைக்கிழங்கு, வெங்காயத்தை சாப்பிட்டு போரிடும் ரஷ்ய வீரர்கள்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. வான்வழி, தரை வழி, கடல் வழியாக மும்முனைகளிலிருந்து தாக்குதல்களை ரஷ்ய படை நடத்தி வருகிறது.
இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள். உக்ரைனில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு மக்கள் அவசர, அவசரமாக அந்தந்த நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று கனடா நாடாளுமன்றத்தில், அந்நாட்டு உறுப்பினர்களிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி மூலம் பேசினார். அப்போது பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கு கனடா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் மனிதாபிமானமற்றது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலில் 97 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், ரஷ்ய-உக்ரைன் போரில் வெறும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் மட்டுமே சாப்பிட்டு ரஷ்ய வீரர்கள் உயிர் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
