ரத்தம் கறை படிந்த உக்ரைன் நாட்டு தேசிய கொடியை மேடையில் உயர்த்திக் காட்டிய போப் பிரான்சிஸ் - ரஷ்யாவிற்கு கண்டனம்
கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. போரை கைவிடுமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில், உக்ரைன் பகுதியில் அதிக இழப்பை ஏற்படுத்த ரஷ்ய ராணுவம் திட்டமிட்டிருக்கிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளை பலாத்காரம் செய்தும் அப்பாவி மக்களை கொன்று குவித்தும் நாசப்படுத்தி வருகின்றனர்.
உக்ரைனில் அதிகப்படியான மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையில், கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இன்னொரு கொடுமை என்னவென்றால், இறந்து கிடக்கும் பிணங்களின் உடல்களை பிளந்து, வெடிகுண்டை நிரப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் உலக அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அப்பாவி பொதுமக்களின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், ரஷ்ய வீரர்கள் அவர்களை சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு போப் பிரான்சிஸ் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட ரத்தம் கறை படிந்த உக்ரைன் நாட்டு தேசிய கொடியை மக்கள் மத்தியில் மேடையில் போப் பிரான்சிஸ் உயர்த்திக் காட்டினார். மேலும், போரில் தப்பி வந்த சிறுவர்களிடம் கலந்துரையாடினார்.
