‘ப்ளீஸ்... போரை நிறுத்துங்கள்...’ - போர் முடிவுக்கு வர திருவண்ணாமலையில் இன்று சிறப்பு வழிபாடு!
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள மரியபோல் நகரில் ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
இரு நாட்டு ராணுவ படைகளுக்கும் பலத்த சண்டை நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதேபோல், ரஷ்ய படைகள் ஆக்ரோஷமாக தாக்குதலுடன் வேகமாக முன்னேறி சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், 2-வது முறையாக உக்ரைனின் பெரிய நகரான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது ரஷ்ய போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, உக்ரைனில் மரியபோல் நகரில் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தீவிரமடைந்துள்ளதால் நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கார்கிவ் நகரம் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கிருந்து லிவிவ் நகருக்கு ரயிலில் செல்ல முயன்றபோது நடந்த தாக்குதலில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைனுக்கும் -ரஷ்யாவிற்கம் போர் நடந்து வருவதால், போரை முடிவுக்கு கொண்டு வர, இன்று மகா சிவராத்திரி நாளில் திருவண்ணாமலையில் சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மல்லி, சாமந்திப்பூ, ரோஜா, வாடாமல்லி உள்ளிட்ட வண்ண வண்ண மலர்களைக் கொண்டு லட்சார்ச்சனை வழிபாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.