உக்ரைன் அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு - ஐரோப்பிய நாடுகள் திட்டம்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 23வது நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது.
தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் கடுமையாக நடந்து வருகிறது.
ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
வான்வழி, தரை வழி, கடல் வழியாக மும்முனைகளிலிருந்து தாக்குதல்களை ரஷ்ய படை நடத்தி வருகிறது.
இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள்.
உக்ரைனில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு மக்கள் அவசர, அவசரமாக அந்தந்த நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
