உக்ரைன் - ரஷ்யா விவகாரம் - இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பேச்சுவார்த்தை

Negotiation ukraine-russia-war போர் அமைதி பேச்சுவார்த்தை at-3.30-pm உக்ரைன் - ரஷ்யா
By Nandhini Feb 28, 2022 08:47 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவ வீரர்கள் பயங்கரமாக சண்டையிட்டு வருகிறார்கள்.

உக்ரைன் - ரஷ்யா போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

போரை நிறுத்த வேண்டும் என்று உலக மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

உக்ரைன் - ரஷ்யா விவகாரம் - இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பேச்சுவார்த்தை | Ukraine Russia War Negotiation At 3 30 P M

இந்நிலையில், அமைதி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் குழு பெலாரஸ் சென்றடைந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை நிறுத்துவது தொடர்பாக பெலாரசில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையிலான இந்த அமைதி பேச்சுவார்த்தை இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இரு நாட்டின் பிரதிநிதிகள், போர் நிறுத்தம் தொடர்பாக இந்த அமைதி பேச்சுவார்த்தையை நடத்த உள்ளனர்.