உலகின் மிகப்பெரிய உக்ரைன் நாட்டு விமானத்தை தாக்கி அழித்த ரஷ்ய படை - வெளியான அதிர்ச்சி தகவல்

russia ukraine war Plane Destruction பதற்றம் largest-in-the-world Russian-Army உக்ரைன் விமானம் அழிப்பு ரஷ்ய போர்
By Nandhini Feb 28, 2022 07:26 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவ வீரர்கள் பயங்கரமாக சண்டையிட்டு வருகிறார்கள்.

உக்ரைன் - ரஷ்யா போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பியா நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

ரஷ்யா ராணுவ படை உக்ரைனை சுற்றிவளைத்து கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. பெரிய பலத்தை கொண்டுள்ள ரஷ்ய படைக்கள் தாக்குதலுக்கு, உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், தலைநகர் கிவ் அருகே Hostomel விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப் பெரிய சரக்கு விமானத்தை ரஷ்ய படை தகர்த்து அழித்துவிட்டதாக உக்ரைன் தகவல் வெளியிட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய உக்ரைன் நாட்டு விமானத்தை தாக்கி அழித்த ரஷ்ய படை - வெளியான அதிர்ச்சி தகவல் | Ukraine Russia War Largest In The World

இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமாக அறியப்பட்ட, உக்ரைனிலேயே தயாரிக்கப்பட்ட AN-225 மிரியா (Mriya) சரக்கு விமானம் ரஷ்ய படையால் தாக்கப்பட்டுள்ளது. மேலும், விமானத்தை அழித்திருந்தாலும், வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக உக்ரைன் அரசு உருவாவதை அவர்களால் ஒருபோதும் அழிக்க முடியாது என்று அவர் பதிவிட்டுள்ளார்.