உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்த தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்

Russia Ukraine War Indian-students tamilnadu student Joined Ukraine paramilitary
By Nandhini Mar 08, 2022 04:28 AM GMT
Report

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது.

இதனால், ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இப்போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, மாணவர்கள் பலர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அவரவர் நாடுகளுக்கு திரும்பி வருகிறார்கள்.

தற்போது, உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த சாய் நிகேஷ் என்ற மாணவர் உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய மாநில அரசுகள் விசாரணையை தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கோவையை சேர்ந்த சாய் நிகேஷ் கடந்த 4 ஆண்டுகளாக உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் விமான பொறியியல் படித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் உக்ரைனின் ஜார்ஜியன் நேஷனல் லிஜியன் என்ற துணை ராணுவத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் துணை ராணுவத்தில் சாய் இணைந்திருப்பது வேதனை அளிப்பதாகவும், அவரை மீட்டுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது பெற்றோர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது சிறுவயதிலிருந்தே சாய் நிகேஷ் ராணுவத்தில் சேர விருப்பப்பட்டதாகவும், ஆனால், உயரம் குறைவு காரணமாக அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், இந்த நிலையில், அவர் உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்த தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் | Ukraine Russia War Indian Students Joined