உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரம் - பாதிக்கப்பட்ட மாணவர்கள் படிப்பு குறித்து பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Russia Ukraine War letter Tamilnadu மாணவர்கள் CM-Stalin Indian-students PM-Modi படிப்பு
By Nandhini Mar 07, 2022 09:05 AM GMT
Report

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள்.

இதனையடுத்து, மாணவர்கள் பலர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அவரவர் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

தற்போது, உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இன்று உக்ரைன் அதிபரை, போனில் தொடர்பு கொண்டு இந்திய பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி, உக்ரைன் அதிபருடன் 35 நிமிடம் வரை பேசினார்.

அப்போது, இந்திய பிரதமர் மோடி, சுமி நகரில் உள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க உதவ வேண்டும் என்றும், இதுவரை இந்திய மாணவர்களை பாதுகாப்பாக இந்தியாவிற்கு அனுப்பியதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இந்தியாவிலேயே படிப்பை தொடர நடவடிக்கை தேவை என்று தமிழக முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.     

உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரம் - பாதிக்கப்பட்ட மாணவர்கள் படிப்பு குறித்து பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் | Ukraine Russia War Indian Students