உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பணயக் கைதியாக பிடித்து வைக்கப்படவில்லை - இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்

Russia Ukraine War Information உக்ரைன் ரஷ்யா இந்திய மாணவர்கள் தாக்குதல் Indian-students Indian-Foreign
By Nandhini Mar 03, 2022 07:07 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 8-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள்.

இன்று 3-வது முறையாக கீவ் நகர் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்போவதாக ரஷ்யா உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கீவ் நகரில் பெரும் பதற்றம் காணப்படுகிறது.

அப்பாவி பொதுமக்களின் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய மாணவர்கள் பணயக் கைதியாக பிடிக்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இது குறித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது -

உக்ரைனில் உள்ள இந்தியர்களுடன் இந்தியத் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. உக்ரைன் அரசின் ஒத்துழைப்புடன் பல மாணவர்கள் நேற்றே கார்க்கிவ் நகரைவிட்டு வெளியேறிவிட்டனர்.

எந்தவொரு மாணவரையும் பணயக் கைதியாக பிடித்து வைத்துள்ளதாக எந்த தகவலும் வரவில்லை. கார்க்கிவ் மற்றும் அதன் அருகில் உள்ள இந்திய மாணவர்களை உக்ரைனின் மேற்குப் பகுதிக்கு அனுப்பி வைக்கச் சிறப்பு ரயில்கள் ஏப்றாடு செய்யும்படி உக்ரைன் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.