ATOM ஆபரேஷன் - ராட்சச கப்பலில் தப்பிக்க அவசரமாக பறந்த புடின் - காட்டிக்கொடுத்த சாட்டிலைட்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள்.
நேற்று 3-வது முறையாக கீவ் நகர் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்போவதாக ரஷ்யா உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கீவ் நகரில் பெரும் பதற்றம் காணப்பட்டது.
இந்நிலையில், தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது இன்று அதிகாலை ரஷிய படைகள் நேரடியாக குறி வைத்து பயங்கரத் தாக்குதல் நடத்தியுள்ளன.
இதனையடுத்து, அடுத்தக்கட்டமாக தன்னுடைய காயை நகர்த்த, ரஷ்ய அதிபர் புடின் திடீரென சொகுசு கப்பல் மூலம் கலினின்கார்ட் பகுதிக்கு தப்பிச் சென்றுள்ள புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த ஒரு வாரமாக க்ரிமிலின் பகுதிக்கு வராமல் ஒதுங்கி இருந்தார் புடின். தற்போது, மொத்தமாக தனது சொகுசு பங்களா இருக்கும் கலினின்கார்ட் பகுதிக்கு சென்றிருக்கிறார்.
அந்த பங்களா மிக அதிக மதிப்பு கொண்டதாம். உள்ளே சிறிய ரக ராக்கெட் லாஞ்சர்களும் உள்ளதாம்.
இதனால், சொத்துக்களை பாதுகாக்கவும், அணு ஆயுத தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ள இவர் இந்த பங்களாவிற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர், சொகுசு கப்பல் மூலம் கலினின்கார்ட் பகுதிக்கு சென்றதை சாட்டிலைட் புகைப்படங்களை சிபிஎஸ் ஊடகம் வெளியிட்டிருக்கிறது.

