‘வேண்டாம்... நிறுத்திடுங்க...’- ரஷ்யா பொருளாதாரப் போரைச் சந்திக்க நேரிடும்... - பிரான்ஸ் நிதியமைச்சர் எச்சரிக்கை
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவ வீரர்கள் பயங்கரமாக சண்டையிட்டு வருகிறார்கள்.
உக்ரைன் - ரஷ்யா போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள மரியபோல் நகரில் ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இரு நாட்டு ராணுவ படைகளுக்கும் பலத்த சண்டை நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அதேபோல், ரஷ்ய படைகள் ஆக்ரோஷமாக தாக்குதலுடன் வேகமாக முன்னேறி சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், 2-வது முறையாக உக்ரைனின் பெரிய நகரான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது ரஷ்ய போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரான்ஸ் நிதியமைச்சர் புரூனோ லீ மைரி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது -
உக்ரைன் மீது ரஷ்யா ஆயுதப் போரை நடத்தி வருகிறது. இதனால், ரஷ்யா கடுமையான பொருளாதாரப் போரை சந்திக்க உள்ளது. தனது நாட்டின் பொருளாதாரம் சீரழிவதை ரஷ்யா மிக விரைவில் பார்க்க உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளால் பொருளாதாரப் போரை ரஷ்யா நிச்சயம் சந்திக்க உள்ளது.
இவ்வாறு அவர் எச்சரித்து பேசியுள்ளார்.