புதின் செய்த தவறுக்கு உக்ரைன் மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட ரஷ்யர் - வைரலாகும் வீடியோ

russia ukraine war வைரல் வீடியோ forgive-us russian-video-viral மன்னித்து விடுங்கள் ரஷ்யர்
By Nandhini Feb 28, 2022 09:56 AM GMT
Report

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவ வீரர்கள் பயங்கரமாக சண்டையிட்டு வருகிறார்கள்.

உக்ரைன் - ரஷ்யா போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

உக்ரைனின் பிஞ்சு குழந்தைகள், முதியவர்கள் இத்தாக்குதலில் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இது குறித்த செய்திகளும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி உலக மக்களின் நெஞ்சை ரணமாக்கியுள்ளது.

உடனே இந்த போரை நிறுத்துங்கள்... என்று உலக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், புதின் தவறுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று உக்ரைன் மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார் ஒரு ரஷ்யர். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

புதின் செய்த தவறுக்கு உக்ரைன் மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட ரஷ்யர் - வைரலாகும் வீடியோ | Ukraine Russia War Forgive Us Russian Video Viral