ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் நாட்டின் பிரபல நடிகை மரணம் - வெளியான அதிர்ச்சி தகவல்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 23வது நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது.
தலைநகர் கீவ்,கார்கீவ்,மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் கடுமையாக நடந்து வருகிறது.
ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. வான்வழி, தரை வழி, கடல் வழியாக மும்முனைகளிலிருந்து தாக்குதல்களை ரஷ்ய படை நடத்தி வருகிறது.
இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள்.
உக்ரைனில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு மக்கள் அவசர, அவசரமாக அந்தந்த நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், ரஷ்ய படைகள் நிகழ்த்திய தாக்குதலில், அந்நாட்டின் பிரபல நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தை குறிவைத்து ரஷ்ய படைகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் அந்த கட்டிடத்தில் இருந்த 67 வயதான நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் உயிரிழந்தார். இவர் உக்ரைனின் உயரிய திரை விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.
விடையறியா உறவுகளின் வடுக்களை சுமக்கும் கனேடிய புலம்பெயர்ந்தோர்! விஜய் தணிகாசலதின் செம்மணி அறிக்கை IBC Tamil
நீதிபதியின் வருகை நுழைவாயிலில் இரகசியமாக நுழைந்த ஹேமரத்தன தேரர்! ஆரம்பமாகிறது அடுத்த விசாரணை IBC Tamil