ரஷ்ய தாக்குதல் - தந்தையை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழுத குழந்தை - கண் கலங்க வைக்கும் வீடியோ
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது.
இதனால், ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இப்போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து, மாணவர்கள் பலர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அவரவர் நாடுகளுக்கு திரும்பி வருகிறார்கள்.
தற்போது, உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவல்துறை அதிகாரியின் குழந்தை ஒன்று தந்தையை பிரிய முடியாமல் அழுது அடம்பிடிக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உக்ரைன் நாட்டை விட்டு வெளியேற இரண்டு கை குழந்தைகளுடன் காவல்துறை அதிகாரியின் மனைவி புறப்பட்டார்.
மனைவியை வழியனுப்பிய காவல்துறை அதிகாரியை அவரது குழந்தை கட்டி அனைத்து கதறி அழுதது. அப்போது தந்தை சாக்லைட் குழந்தைக்கு கொடுத்தார்.
அப்போதும், சாக்லைட் வாங்க மறுத்த அக்குழந்தை தந்தையின் தலையில் அடித்து அடம் பிடித்துக் கொண்டிருந்தது.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.