‘மன்னித்துவிடு செல்லமே...’ - குழந்தைகளின் முதுகில் விவரம் எழுதும் உக்ரைன் தாய்மார்கள் - வைரலாகும் புகைப்படம்

russia ukraine war baby-back-detail photos-viral உக்ரைன்தாய்மார்கள் வைரலாகும்புகைப்படம்
By Nandhini Apr 06, 2022 11:41 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

போரை கைவிடுமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், உக்ரைன் பகுதியில் அதிக இழப்பை ஏற்படுத்த ரஷ்ய ராணுவம் திட்டமிட்டிருக்கிறது.

பெண்கள் மற்றும் சிறுமிகளை பலாத்காரம் செய்தும் அப்பாவி மக்களை கொன்று குவித்தும் நாசப்படுத்தி வருகின்றனர். உக்ரைனில் அதிகப்படியான மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அந்த சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையில், கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இன்னொரு கொடுமை என்னவென்றால், இறந்து கிடக்கும் பிணங்களின் உடல்களை பிளந்து, வெடிகுண்டை நிரப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் உலக அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சமூகவலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தைப் பார்த்த உலக மக்களின் நெஞ்சம் ரணமாக்கியுள்ளது. 

ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமாகி வருவதால் உக்ரைன் நாட்டு மக்கள் குடும்பங்களை விட்டு பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உக்ரைனில் இருக்கும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளின் முதுகில் குடும்ப விவரங்களை எழுதி வைத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

ஒரு வேளை தாக்குதலின்போது குடும்பத்தினர் மறைந்துவிட்டாலோ, பிரிந்துவிட்டாலோ பாதுகாப்பான இடங்களை தேடிச்செல்லும் குழந்தைகளுக்கு இந்த விவரங்கள் உதவலாம் என்பதால் இது போன்று எழுதி வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.