உக்ரைனின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீது ரஷ்ய படைகள் பயங்கரத் தாக்குதல் - வெளியான அதிர்ச்சி வீடியோ
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள்.
நேற்று 3-வது முறையாக கீவ் நகர் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்போவதாக ரஷ்யா உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கீவ் நகரில் பெரும் பதற்றம் காணப்பட்டது.
இந்நிலையில், தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது இன்று அதிகாலை ரஷிய படைகள் நேரடியாக குறி வைத்து பயங்கரத் தாக்குதல் நடத்தின.
இந்த அணு மின் நிலையம் தீயில் கொளுந்து விட்டு எரிந்தது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அணுமின் நிலையம் அருகில் அமைந்துள்ள பகுதிகளில் கடும் புகைமூட்டம் காணப்பட்டது.
இந்த சபோரோஷியா அணுமின் நிலையம்தான் ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமாக கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் அணுமின் நிலையத்தின் அருகே கதிர்வீச்சு கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சபோரோஷியா வெடித்தால் அது செர்னோபில் அணுஉலை பாதிப்பை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா எச்சரித்திருக்கிறார்.
சபோரோஷியா அணுஉலை நிலையத்தின் தற்போதைய நிலை குறித்து அறிய உக்ரேனிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருவதாக சர்வதேச அணுசக்தி கழகம் தெரிவித்திருக்கிறது.
#WATCH | Adviser to the Head of the Office of President of Ukraine Volodymyr Zelenskyy tweets a video of "Zaporizhzhia NPP under fire..."#RussiaUkraine pic.twitter.com/R564tmQ4vs
— ANI (@ANI) March 4, 2022