உக்ரைனில் ATM களில் அலை மோதும் மக்கள் கூட்டம் - பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை

ATM crowd ukraine-russia-war ukraine people Long queue உக்ரைன் - ரஷ்யா போர் ATM களில் மக்கள் கூட்டம்
By Nandhini Feb 24, 2022 09:15 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு பகுதியில் முக்கிய நகரங்களில் ரஷ்யா ராணுவம் குண்டு மழை பொழிந்து வருகிறது.

ராணுவ தளங்கள், விமான தளங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் மக்கள் பதற்றத்துடன், அச்சத்துடனும் இங்கும், அங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும் பீதியுடன் காணப்படுகிறார்.

ரஷ்யா நடத்திய இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் வருவதை பயன்படுத்தி, உக்ரைனின் லுகான்ஸ்க் பகுதியிலுள்ள 2 நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

உக்ரைனில் ATM களில் அலை மோதும் மக்கள் கூட்டம் - பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை | Ukraine Russia War Atm People Crowd

பல மணி நேரமாக உக்ரைன் மீது வான்வெளி தாக்குதல் நடத்திவந்த ரஷ்யா தற்போது, பாராசூட்கள் மூலம் நூற்றுக்கணக்கான வீரர்களை இறக்கி, நாட்டிற்குள் நுழைந்தும் தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. 

இதனையடுத்து, உக்ரைன் நாட்டு ATMகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுப்பதற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இந்தப் போரால் உக்ரைனின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.