‘விடமாட்டோம்... வான்வழித் தாக்குதல் நடத்தப்போறோம்...’ - உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்யா
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 8-வது நாளாக தாக்குதல் நடைபெற்று வருகிறது.
ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள்.
நேற்று சைடோமிர் நகரிலுள்ள குழந்தை மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட 10 கட்டிடங்கள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலில் மருத்துவமனையில் இருந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 16 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக மருத்துவமனையில் தகவல் தெரிவித்தது.
இதனையடுத்து, கீவ் நகரில் ரஷ்ய படைகள் முன்னேறாமல் தடுக்க சேதத்திற்கு உள்ளான ரஷ்ய வாகனங்களை கொண்டு, தடைகளை பொதுமக்கள் ஏற்படுத்தினார்கள்.
இந்நிலையில், 3-வது முறையாக கீவ் நகர் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்போவதாக ரஷ்யா உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கீவ் நகரில் பெரும் பதற்றம் காணப்படுகிறது. அப்பாவி பொதுமக்களின் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ். பலாலியில் வீதிக்கு வந்த பொதுமக்கள் - சிங்கள மயமாக்கும் தமிழர் நிலங்கள்: சிறீதரன் எம்.பி சீற்றம் IBC Tamil
எக்னெலிகொட வழக்கில் சாட்சியை மீண்டும் அழைப்பதைத் தடுக்க உயர் நீதிமன்றத்தை நாடிய பாதுகாப்புத் தரப்பு IBC Tamil