போரை உடனே நிறுத்துங்கள்... - புதினுக்கு கோரிக்கை விடுத்த நடிகர் அர்னால்டு
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 23வது நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது.
தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் கடுமையாக நடந்து வருகிறது. ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
வான்வழி, தரை வழி, கடல் வழியாக மும்முனைகளிலிருந்து தாக்குதல்களை ரஷ்ய படை நடத்தி வருகிறது.
இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள். உக்ரைனில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு மக்கள் அவசர, அவசரமாக அந்தந்த நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், ரஷ்யா தாக்குதல் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டாவால் உங்கள் சகோதர, சகோதரிகளை சுடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
I love the Russian people. That is why I have to tell you the truth. Please watch and share. pic.twitter.com/6gyVRhgpFV
— Arnold (@Schwarzenegger) March 17, 2022