கனடாவில் நுழைய ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு தடை - மார்கோ மென்டிசினோ அதிரடி

Russo-Ukrainian War Canada
By Nandhini May 18, 2022 05:21 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

போரை கைவிடுமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. உக்ரைன் பகுதியில் அதிக இழப்பை ஏற்படுத்த ரஷ்ய ராணுவம் திட்டமிட்டு போர் தொடுத்து வருகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளை பலாத்காரம் செய்தும் அப்பாவி மக்களை கொன்று குவித்தும் நாசப்படுத்தி வருகின்றனர். உக்ரைனில் அதிகப்படியான மனித சடலங்கள் மீட்கப்பட்டன.

அந்த சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையில், கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உக்ரைன் வழியாக நுழைய கனடா தடை விதித்திருக்கிறது.

இது குறித்து, அந்நாட்டு பொது பாதுகாப்பு துறை மந்திரி மார்கோ மென்டிசினோ பேசியதாவது -

உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அவரது அரசு மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த 1,000 பேர் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், "புதின் ஆட்சியின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது ரஷ்யாவை அதன் குற்றங்களுக்குப் பொறுப்பேற்கும் பல வழிகளில் ஒன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

கனடாவில் நுழைய ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு தடை - மார்கோ மென்டிசினோ அதிரடி | Ukraine Russia War