உக்ரைனில் பயங்கர சத்தத்துடன் பள்ளியில் குண்டு வெடிப்பு - 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Russo-Ukrainian War
By Nandhini May 08, 2022 11:36 AM GMT
Report

கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.

இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. போரை கைவிடுமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.

உக்ரைன் பகுதியில் அதிக இழப்பை ஏற்படுத்த ரஷ்ய ராணுவம் திட்டமிட்டு போர் தொடுத்து வருகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளை பலாத்காரம் செய்தும் அப்பாவி மக்களை கொன்று குவித்தும் நாசப்படுத்தி வருகின்றனர். உக்ரைனில் அதிகப்படியான மனித சடலங்கள் மீட்கப்பட்டன.

அந்த சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையில், கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள பள்ளியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 60 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

உக்ரைனில் பயங்கர சத்தத்துடன் பள்ளியில் குண்டு வெடிப்பு - 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு | Ukraine Russia War