உக்ரைன், ரஷ்ய வீரர்களுக்கு இடையே நடக்கும் துப்பாக்கிச் சூடு காட்சி - பதற வைக்கும் திக்...திக்...திக்.. வீடியோ வைரல்

Russo-Ukrainian War
By Nandhini Apr 30, 2022 05:24 AM GMT
Report

கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

போரை கைவிடுமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.

உக்ரைன் பகுதியில் அதிக இழப்பை ஏற்படுத்த ரஷ்ய ராணுவம் திட்டமிட்டு போர் தொடுத்து வருகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளை பலாத்காரம் செய்தும் அப்பாவி மக்களை கொன்று குவித்தும் நாசப்படுத்தி வருகின்றனர். உக்ரைனில் அதிகப்படியான மனித சடலங்கள் மீட்கப்பட்டன.

அந்த சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையில், கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உக்ரைனுக்கும், ரஷ்யா வீரர்களுக்கும் இடையே பலத்த துப்பாக்கிச் சண்டை நடக்கிறது.

அந்த துப்பாக்கி சண்டையில், உக்ரைன் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஓடிச் சென்றுக்கொண்டிருந்த ரஷ்யா வீரர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் கீழே சரிந்து விழுகிறார். 

மற்ற 2 வீரர்கள் துப்பாக்கிச் சூட்டில் சுருண்டு விழுந்த வீரரை இழுக்க முயற்சி செய்கின்றனர். அப்போது, உக்ரைன் வீரர்கள் கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ரஷ்ய வீரர்கள் ஓடி ஒளிந்து கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர்.

இந்த திக்... திக்... திக்.. வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.