நாங்கள்.. உக்ரைன் நகரமான மரியுபோலை கைப்பற்றி விட்டோம்... - ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு

Vladimir Putin Russo-Ukrainian War
By Nandhini Apr 21, 2022 07:58 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

போரை கைவிடுமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. உக்ரைன் பகுதியில் அதிக இழப்பை ஏற்படுத்த ரஷ்ய ராணுவம் திட்டமிட்டிருக்கிறது.

பெண்கள் மற்றும் சிறுமிகளை பலாத்காரம் செய்தும் அப்பாவி மக்களை கொன்று குவித்தும் நாசப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில், உக்ரைனில் அதிகப்படியான மனித சடலங்கள் மீட்கப்பட்டன.

அந்த சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையில், கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

உக்ரைன் தலைநகர் கீவியிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறியுள்ள நிலையில், அங்கிருந்து சுமார் 900 உடல்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

வடமேற்கு ரஷ்யாவின் ஆர்க்காங்கெல்ஸ்க் பகுதியில், `சர்மாட்' என்னும் கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை சோதனையை ரஷ்யா நேற்று வெற்றிகரமாக செய்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரபூர்வமாக தெரிவித்தது.

இதனையடுத்து, எதிரிகள் ஒன்றுக்கு இருமுறை யோசித்துவிட்டு மோதுங்கள் என்று அதிபர் தெரிவித்த நிலையில், தற்போது, உக்ரைனின் நகரமான மரியுபோலில் உள்ள உருக்காலையைத் தவிர, மற்ற அனைத்துப் பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் ரஷ்யா கொண்டு வந்துவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார்.   

நாங்கள்.. உக்ரைன் நகரமான மரியுபோலை கைப்பற்றி விட்டோம்... - ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு | Ukraine Russia War