உக்ரைனின் மரியபோல் நகரை சூழ்ந்து ரஷ்யப் படை தாக்குதல் - 5 ஆயிரம் பேர் பலி..!
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 30 நாட்களை கடந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் கடுமையாக நடந்து வருகிறது.
ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
வான்வழி, தரை வழி, கடல் வழியாக மும்முனைகளிலிருந்து தாக்குதல்களை ரஷ்ய படை நடத்தி வருகிறது.
இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள். உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் வலுப்பெற்று வருகிறது.
2014ம் ஆண்டு மாஸ்கோவால் இணைக்கப்பட்ட கிரிமியாவிற்கும், கிழக்கு உக்ரைனில் உள்ள இரண்டு பிரிவினைவாத பகுதிகளுக்கும் இடையே ஒரு தரைப்பாலத்தை உருவாக்க தடையாக இருப்பதால்தான் மரியுபோல் நகரத்தை ரஷ்யா தீவிரமாக தாக்கி வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மரியுபோலில் 210 குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 5,000 பேர் கொல்லப்பட்டதாக அந்நகர மேயரின் செய்தித் தொடர்பாளர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
